Showing posts with label ஆபீஸ் வேலை. Show all posts
Showing posts with label ஆபீஸ் வேலை. Show all posts

Friday, April 23, 2010

A Moral Story - mail from a friend

ஒரு சலவை தொழிலாளிகிட்ட ஒரு நாயும், கழுதையும் இருந்துச்சு. ஒரு நாள் அந்த சலவை தொழிலாளி ராத்திரி நல்லா தூங்கிட்டுருக்கும்போது வீட்டுக்குள்ள கதவை உடைச்சிட்டு ஒரு திருடன் வந்துட்டான். சலவை தொழிலாளி நடப்பது தெரியாமல் நல்ல உறக்கத்திலிருக்க, திருடனைப்பார்த்த நாய் குரைக்காமல் கம்முன்னு இருந்துச்சு. சரியா சோறே போடறதில்லை, இவனுக்கு நாம ஏன் உதவி பண்ணனும்னு நாய் குரைக்கவில்லை. அதைப்பார்த்த கழுதை என்னடா இவன் கம்முன்னு இருக்கான், குரைச்சு முதலாளியை எழுப்புவான்னு பார்த்தா சும்மா இருக்கான், சரி நாமளாவது சத்தம் போட்டு முதலாளிக்கு திருடன் வந்ததை அலர்ட் பண்ணுவோம்னு கத்த ஆரம்பிச்சுது. சத்தம் கேட்டதும் கள்ளன் ஓடிவிட்டான். சத்தத்தில் தூக்கத்தில் இருந்து எந்திருச்ச சலவைதொழிலாளி ஒரு கட்டையை எடுத்து பளார்னு கழுதை தலைல ஒரே அடி. கூறுகெட்ட கழுதை நேரங்காலம் தெரியாம கத்திகிட்டு இருக்கேன்னு கழுதையை திட்டிவிட்டு திரும்பவும் படுத்துகிட்டான்.

நீதி: ஆபிஸ்ல என்னவேலை கொடுத்திருக்கோ அதைமட்டும்தான் செய்யனும். ஓவரா சீன் போட்டா இப்படித்தான்